ஏலசீட்டு நடத்தி மோசடி - கணவருடன் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கைது..!!
bjp em women excuetive arrested for money fraud in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த கள்ளக்குறிச்சி நகர முன்னாள் பா.ஜனதா தலைவர் சூரியமகாலட்சுமி என்பவர் தனது கணவரும், பா.ஜனதா மாவட்ட தரவு தள மேலாண்மை முன்னாள் துணைத் தலைவருமான சிவக்குமாருடன் சேர்ந்து தீபாவளி மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.
ஆனால் இதன் மூலம் மோசடி செய்து விட்டதாகவும், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதியிடம் பெண் ஒருவர் பிகார் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், சிவக்குமாரும், சூரியமகாலட்சுமியும், கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீபாவளி மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். ஆனால், இருவரும் தீபாவளி மற்றும் ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு சரிவர பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் இருவரும் திடீரென தலைமறைவாகி விட்டனர். இதில் 54 பேரிடம் ரூ.2 கோடியே 60 லட்சத்து 66 ஆயிரத்து 867 மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவான சிவக்குமார், சூரியமகாலட்சுமி ஆகியோரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிவக்குமாரும், சூரியமகாலட்சுமியும் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் கையும் கலாவுமாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
bjp em women excuetive arrested for money fraud in kallakurichi