கள்ளகாதலால் கைதான பாஜக பிரமுகர் - அயனாவரத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலால் கைதான பாஜக பிரமுகர் - அயனாவரத்தில் பரபரப்பு.!

சென்னையில் உள்ள அயனாவரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வசந்தா மகள் நிஷா. இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

தந்தையை பிரிந்து தாயுடன் தனியாக வசித்து வரும் இவரது வீட்டின் கீழ் தளத்தில் சத்தியமூர்த்தி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் பாஜகவில் மத்திய சென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதியின் பகுதிச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், நிஷாவுக்கும், சத்திய மூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது தகாத உறவாக மாறியது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இது குறித்து தகவலறிந்த சத்தியமூர்த்தியின் மனைவி காமாட்சி நிஷாவிடம் தகராறு செய்துள்ளார். 

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த நிஷாவின் தாய் வசந்தா, தனது மகள் நிஷாவை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த நிஷா தனது தாயை தகாத வார்தத்தையால் திட்டியதுடன், சத்தியமூர்த்திக்கு தகவல் தெரிவித்துளார். 

அதன் படி, உடனே வீட்டிற்கு வந்த சத்தியமூர்த்தி, அவரது தாய் வசந்தாவுடன் சண்டையிட்டதுடன் அவரைத் தாக்கியும் உள்ளார். இதில் வசந்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, நிஷாவை மீட்டு சிகிச்சைக்காக கேம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு சிகிச்சைப் பெற்ற வசந்தா, பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் பாஜக பிரமுகர் சத்தியமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தகாத உறவால் பாஜக பிரமுகர் கைதான விவகாரம் கட்சி வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp excuetive arrested for illegal relationship in chennai ayanavaram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->