முலமைச்சர் குறித்து அவதூறு கருத்து - பாஜக நிர்வாகி கைது.!
bjp excuetive arrested for post against cm mk stalin
முலமைச்சர் குறித்து அவதூறு கருத்து - பாஜக நிர்வாகி கைது.!
சமூக வலைதளங்களில் திமுக அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்து பாஜகவினர் பலரும் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதில், மிகமோசமான முறையில் பதிவிடுபவர்கள் மீது திமுகவினர் அளிக்கும் புகாரின் பேரில், தமிழ்நாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த வாரம் புதுக்கோட்டைக்கு வந்துச் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அரசர்குளம் கமல் கண்ணன் என்பவர் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அண்ணாதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கமல் கண்ணனை இன்று கைது செய்துள்ளனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
bjp excuetive arrested for post against cm mk stalin