மத்திய அரசு வேலைக்கு ரூ.10 லட்சம்... ஆட்டைய போட்ட பாஜக நிர்வாகி.. தட்டி தூக்கிய காவல்துறை..!!
BJP executive arrested defraud 10lakh for central govt job
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஜயராஜ் பொறியியல் பட்டதாரியான இவர் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தொழிநுட்ப பிரிவு தலைவர் பெரியசாமி, இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்த பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவர் பழனிவேல் மற்றும் சிதம்பரத்தைச் சேர்ந்த தீபக் ஆகியோரை அரசு வேலை தொடர்பாக அணுகி உள்ளார்.
அப்போது அவர்கள் ரூ.10 லட்சம் கொடுத்தால் மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். இதற்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.9.5 லட்சம் பணத்தையும் செலுத்தினர். சில மாதங்கள் கடந்த பின்னரும் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை.
இதுகுறித்து விஜயராஜ் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து திட்டக்குடி போலீசார் பெரியசாமி, பழனிவேல், தீபக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி அவரது வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை பெரியசாமி வீட்டிற்கு சென்ற திட்டக்குடி போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற இரு பாஜக நிர்வாகிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
BJP executive arrested defraud 10lakh for central govt job