பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு... எந்த தகவலும் அறியாது - ஆளுநர் மாளிகை விளக்கம்.! - Seithipunal
Seithipunal



தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பொய்யான தகவலை பரப்புகிறார் என சமூக ஆர்வலர் புகாரின் அடிப்படையில் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு குறித்து எந்த ஒரு தகவலும் தெரியாது என ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியால் தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்ததாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களுக்காக பொதுமக்களிடம் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. 

அண்ணாமலைக்கு எதிரான வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலையும் அறிந்திருக்கவில்லை. மேலும் இது குறித்து அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader Annamalai against case Governor House explanation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->