பாஜக நிர்வாகி பாலசந்திரன் கொலை வழக்கு.. காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர் பாஜகவின் எஸ்.சி, எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார். 

கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாலச்சந்திரன் போலீசார் பாதுகாப்புடன் சிந்தாரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்கு சென்றார். அங்கு சிலருடன் பாலச்சந்திரன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த டீ கடைக்கு சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் பாஜக நிர்வாகி பாலச்சந்திரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து, கொலை வழக்கில் தொடர்புடையதாக பிரதீப், அவனது கூட்டாளிகளான கலைவாணணன், ஜோதி, பிரதீப் சகோதரர் சஞ்சய் ஆகிய 4 பேரை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலசந்திரன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்து  சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படவில்லை என  பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp member murder case dismissal of police inspector


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->