அப்படியெல்லாம் இல்லைங்க! வீடியோ ஆதாரத்துடன் உள்ளே வந்த பாஜக! - Seithipunal
Seithipunal


சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிரபல ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக பேசுவதற்கு பதிலாக, மூடநம்பிக்கை வளர்க்கும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமானப்படுத்தியதாகவும் காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து விசாரணை செய்ய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு தரப்பில் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாஜகவின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, தலைமை ஆசிரியை மற்றும்  மகாவிஷ்ணு ஆதரவாக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

அதில், மிகத் தெளிவாக, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் தான் இந்த நிகழ்ச்சி ம‌ற்று‌ம் பேச்சு அமைந்திருந்தது என்றும் மத ரீதியான கருத்துக்கள் எதுவுமே சொல்லப்படவில்லை என்கிறார் தலைமை ஆசிரியை.  

ஆனால், யாரோ சிலரின் சமூக ஊடக பதிவுகளின் அடிப்படையில் பயந்து கொண்டு அமைச்சர் 
அன்பில் மகேஷ் அவர்கள் அவசர கதியில் தலைமை ஆசிரியை மீது நடவடி‌க்கை எடுத்திருப்பது நகைப்புக்குரியது மட்டுமல்ல,  

கண்டிக்கதக்கதும் கூட. ஆன்மீகமும் அறிவியல் தான் என்பதை அறியாமல்  பகுத்தறிவு எ‌ன்ற பெய‌ரி‌ல் ஹிந்து விரோத சிந்தனையை விதைக்கும் தீய சக்திகளுக்கு துணை போகிறது தமிழக அரசு.

மாணவிகளின் தன்னம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் எடுக்கப்பட்ட தலைமை ஆசிரியையின் மீதான நடவடிக்கையை அரசு திரும்பப்பெற வே‌ண்டு‌ம்" என்று நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan say about MahaVishnu AshokNagar School


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->