கழிப்பறை கழுபவர்கள் என்று நீங்க கேவலப்படுத்துறீங்க! ஆனால், அவர்கள்.... பாஜக நாராயணன் சொன்ன செய்தி!
BJP Narayanan Thirupathy Condemn to DMK
பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "உத்தரபிரதேச மாநிலத்தவர்களை (ஹிந்தி பேசுபவர்களை) பன்னி குட்டி போடுபவர்கள் என்று தமிழக அமைச்சர் தா.மோ. அன்பரசனும், பானி பூரி விற்பவர்கள், கட்டட வேலை பார்ப்பவர்கள், கழிப்பறை கழுபவர்கள் என்று சில தமிழக அமைச்சர்களும், திமுக வினரும் தொடர்ந்து கேவலப்படுத்திக் கொண்டே வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தின் எதிரில் பிரம்மாண்டமான திருவள்ளுவரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 35 வருடங்களாக பாஷா சங்கம் (மொழி சங்கம்) என்ற அமைப்பும், உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகள் பலரும் திருவள்ளுவருக்கு உத்தரபிரதேசத்தில் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து கொண்டிருந்த நிலையில், கடந்த மாதம் கும்ப மேளாவை முன்னிட்டு திருவள்ளுவர் சிலையை ரயில்நிலைய நாற்சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்த திருவள்ளுவர் சிலையை பிரயாக்ராஜ் வரும் பயணிகள் அனைவரும் காண்பார்கள்.
பலர் முயற்சி செய்திருந்தாலும், 'இந்து தமிழ்' நாளிதழின் மூத்த செய்தியாளரும், என் அருமை நண்பருமான Rahiman Shaffimunna ஷஃபி முன்னா அவர்களின் விடா முயற்சி வெகுவாக பாராட்டத்தக்கது. உத்தரப்பிரதேச அதிகாரிகளிடமும், அரசிடமும் திருக்குறளின் பெருமைகளை எடுத்துரைத்ததோடு, திருவள்ளுவர் சிலையை வைக்க ஒருங்கிணைப்பு செய்த அவரது முயற்சிகள் எண்ணிலடங்காதவை. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் ஹிந்தி, சம்ஸ்க்ரிதம், உருது போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை உத்தரபிரதேச அரசின் பார்வைக்கு எடுத்து சென்றதோடு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மனுக்களை உரிய அதிகாரிகளிடத்தில் சென்று எடுத்துரைத்து திருவள்ளுவரின் சிலையை அமைக்க பெரும் பணியாற்றியுள்ளார் நண்பர் ஷஃபிமுன்னா.
உத்த்ரபிரதேசத்தில் திருவள்ளுவரும், திருக்குறளும் உலா வரும் நேரத்தில், அம்மாநில மக்களை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசி வருகின்றனர் தமிழக திராவிட மாடல்கள்.
திருவள்ளுவரின் பெருமையை, திருக்குறளின் அருமையை உத்தரபிரதேசத்தில் நிலைநாட்டியதில் பெரும்பங்காற்றியுள்ள ஷஃபி முன்னா அவர்களுக்கும், பல்வேறு முதலமைச்சர்கள் ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருவள்ளுவரின் பெருமை உணர்ந்து, திருக்குறளின் மகிமை அறிந்து அவரின் சிலையினை நிறுவ அனுமதித்த இன்றைய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகள்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy Condemn to DMK