சீனாவுக்கு எதிராக தமிழீழ அரசியல்.. பாஜக போடும் புது கணக்கு..!! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இலங்கைக்கு சென்று இருந்தனர். தமிழர் பகுதியில் உள்ள சில அரசியல் கட்சிகளின் அழைப்பை ஏற்று செல்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமும் அளித்திருந்தார்.

இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கடன் தருவதாக கூறி இலங்கை எல்லைப் பகுதி மற்றும் கடற்பகுதியில் சீனா ஆதிக்கத்தை செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனாவின் இத்தகைய போக்கு இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. சீனா இலங்கையை ஒரு காலனி ஆதிக்க நாடாக மாற்றிவிடவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு உதவி செய்யும் நோக்கில் இந்திய அரசு சில ஆலோசனைகளை முன்வைத்து வருகிறது.

சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான ஆளுமைகளுக்கு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் அளிக்க துணை நிற்பதோடு இலங்கையின் நிதி நிலையை சரி செய்ய ஒரு சில உதவிகளை இந்தியா செய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று உலக தமிழர்கள் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாகவும் அவருடன் தொடர்பு இருப்பதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் ரீதியில் பிரபாகரனை வைத்து இலங்கையை தன்னுடைய வழிக்கு கொண்டு வர இந்தியா முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இலங்கையின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை இந்தியா திரும்பியுள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்திலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சிலர் ஆயுதம் ஏந்தி செயல்பட தொடங்கி விடுவார்கள் என்பதை உணர வேண்டும். பழ.நெடுமாறன் சில மாதங்களுக்கு முன்பு மோடியையும் இந்திய அரசையும் பாராட்டி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP trying tamil eelam politics against china with prabhakaran return


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->