ஒன் டு ஒன்! தயாநிதி மாறனுக்கு மீண்டும் சவால்! அடித்தாடும் பாஜக வினோஜ் பி செல்வம்! - Seithipunal
Seithipunal


மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் தமிழ்நாடு மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் இன்று துறைமுகம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கூட்டணி கட்சியான பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களும் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

செல்லும் இடமெல்லாம் வினோஜ் பி செல்வத்திற்கு மக்கள் உற்சாக வரவேற்பையும், தங்கள் பிரச்சனைகளையும் தெரிவித்து வருகின்றனர்

பிரச்சாரத்திற்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த வினோஜ் பி செல்வம் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதன் விவரம் பின்வருமாறு;

"தயாநிதிமாறன் என்ன தவறு செய்திருக்கிறார் என்பதை அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு வருகின்ற மக்களின் எதிர்ப்பே நமக்கு தெளிவாக காட்டுகின்றது. தயாநிதிமாறன் எங்கு சென்றாலும் மக்கள் கடுமையான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

ஆனால் அவர், கேள்வி கேட்கும் மக்களை மக்களிடம் காசு கொடுத்து ஏமாற்ற தான் பார்க்கிறாரே தவிர, நாங்கள் வளர்ச்சியை கொடுப்பேன், இந்த குடிசைப் பகுதியில் இருந்து மக்களை மாற்றி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு மாற்றுவேன், உங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பேன், உங்கள் குழந்தைகளை விளையாட்டு வீரர்களாக மாற்றுவேன், உங்கள் வாழ்வாதாரத்தை மாற்றுவேன் என்றெல்லாம் சொல்வது கிடையாது.

எதற்கெடுத்தாலும் இலவசம்.. இலவசம்.. இலவசம்.. என்று கொடுத்துவிட்டு, ஓசி, பல பலன்னு வந்து இருக்கீங்க, பேர்&லவ்லி போட்டிருக்கீங்களா என்று மக்களை இழிவுபடுத்தி, அவமானப்படுத்தும் செயலில்தான் திமுக எம்பிகளும், எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக மக்களுக்கு சுயமரியாதையே இருக்கக் கூடாது என்பதுதான் இந்த திமுக குடும்பத்தின் முதல் நோக்கமாக உள்ளது. தயாநிதிமாறன் எம்பியாக இருந்து மக்களுக்கு என்ன செய்தார் என்பதை ஊடகங்களும் கேள்வி கேட்க வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் மக்களுக்காக பேசி என்ன செய்திருக்கிறார், என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார், எவ்வளவு நிதி கொடுத்து உள்ளீர்கள், என்னெல்லாம் இந்த தொகுதிக்கு திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என்று ஊடகங்களும், மக்களும் கேள்வி கேட்க வேண்டும்.

இந்த கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை என்பதால் தான், அவரை தொகுதி உள்ளேயே விடாமல் மக்கள் துரத்தி அடிக்கின்றனர்.

ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு, ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தேன் என்பதற்காக பிறந்துவிட்டு எது வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று நினைக்க முடியாது. களத்தில் வந்து பார்க்க வேண்டும். மக்களை நேரில் சந்திக்க வேண்டும்.

உதாரணத்திற்கு இந்த துறைமுகம் தொகுதியில் உள்ள மின்ட் ஸ்ட்ரீட் உலகத்திலேயே மிகப்பெரிய வணிக கடைகள் உள்ள நீண்ட தெரு என்ற பெருமைக்குரிய தெரு. இதில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் உள்ளனர். அவர்கள் செல்வதற்கே பாதை வசதி கிடையாது. பார்க்கிங் வசதி கிடையாது. அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

இதுபோலவே திருவல்லிக்கேணி மீன் மார்க்கெட் ஆரம்பித்து மின்ட் தெருவில் உள்ள வியாபாரிகள் வரை தொகுதி முழுவதும் உள்ள வியாபாரிகள் பிரச்சனையில் உள்ளனர். இந்த பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். 

இந்த தொகுதி முழுவதுமே சுகாதாரம் இல்லாத ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. புளியந்தோப்பு பகுதி, ஆடுதொட்டி, சௌகார்பேட்டை பகுதி, வால் ட்ராக்ஸ் ரோடு உள்ளிட்ட அனைத்து  பகுதிகளிலும் சுகாதாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் சுகாதார திட்டங்களால் நாடு முழுவதும் பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னையில் பொறுத்த வரை சுகாதாரம் என்பது கடைநிலையில் உள்ளது.

மாநிலம் வாரியாக நாட்டு மக்களை பிரிப்பது தவறு. அனைவருமே இந்தியர்கள் தான். மத ரீதியாக, மொழி ரீதியாக, இனம் ரீதியாக மக்களை பிரிப்பது திமுகவின் வேலை. அதனை நாங்கள் செய்ய மாட்டோம். பாஜகவை பொறுத்தவரை இங்கு உள்ள அனைவருமே இந்தியர்கள். இந்திய மக்கள், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைவரையுமே இந்திய குடிமக்கள், தமிழர்கள் தான். எங்களுடைய அரசியல் அனைவருக்குமான அரசியல். நாங்கள் அனைவருக்கும் வளர்ச்சியை கொடுப்போம்.

தமிழகத்திற்கு பீகார் காரன் வந்தான் பாத்ரூம் கழுவுனான், 
உத்தரப்பிரதேச காரம் வந்தான் பானிபூரி வித்தான் என்று அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி, அநாகரீகமான அரசியலை திமுக செய்து வருகிறது. அது போன்று நாங்கள் செய்யப் போவதில்லை.

தயாநிதிமாறன் அவரைப் பற்றி தான் முதலில் கவலைப்பட வேண்டும். 400 மேற்பட்ட மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் மோடிதான் பிரதமராக வரப் போகிறார்.

கடந்த முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக போன நீங்கள் (தயாநிதிமாறன்) என்ன செய்தீர்கள்? என்ன சாதனை செய்தீர்கள்? எதை மக்களுக்காக செய்தீர்கள்? இந்த கேள்விக்கான பதில் உங்களிடம் உள்ளதா? ஒரு எம்பி செய்ய வேண்டிய வேலை என்ன என்பதாவது உங்களுக்கு தெரியுமா? ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்யும்போது நான் அவரை ஒன் டு ஒன் விவாதத்திற்கு அழைத்திருந்தேன்.

மீண்டும் இந்த ஊடகங்கள் மூலமாக அவருக்கு நான் சவால் விடுகிறேன். என்னுடன் அவரை விவாதத்துக்கு வர அழைக்கிறேன். நேரடியாக வரட்டும் வேட்பாளர் டு வேட்பாளர்.

அவர் என்ன செய்திருக்கிறார், என்ன என்ன செய்யப் போகிறார், உங்களால் இந்த தொகுதிக்கு ஏற்பட்ட நல்லது என்ன என்பதை விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். அவருக்கு தைரியம் இருந்தால் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளட்டும். அவர் சொல்லும் இடத்தில் நான் வர தயார். அவர் எங்கு செல்கிறாரோ அந்த இடத்திலேயே கேள்வி கேட்டு மக்களை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். அவர் இதற்கு பதில் சொல்லட்டும்" என்று வினோஜ் பி செல்வம் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Vinoj P Selvam Challenge to Dhayanithimaran Election 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->