விரைவில் படகு அம்புலன்ஸ் சேவை - எங்குத் தெரியுமா?
boat ambulance service in tamilnadu
தமிழ் நாட்டில், மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் உள்ள, 108 ஆம்புலன்ஸ் சேவையை, 'இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீசஸ்' நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன் படி, தமிழகத்தில் 900க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன.
இருப்பினும், இந்த அம்புலன்சுகளை மழை வெள்ள பாதிப்புகளின் போது, இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதாவது, சமீபத்தில் பெய்த மழையின் போது, 136 கர்ப்பிணியர் உட்பட 1,219 பேர், 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக மீட்கப்பட்டனர். அதேபோல், மீனவர்கள் உதவியுடன் படகு மூலமாகவும் நோயாளிகள் மீட்கப்பட்டனர்.
அதனால், ஒவ்வொரு வருடமும் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் போது, இரண்டு படகு ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த, 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த படகு ஆம்புலன்சிற்கு, மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்துக்கும், 45 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று தகவல் வெளியாகிறது.
இந்த திட்டம் குறித்து, 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகள் கூறியதாவது: "படகு ஆம்புலன்ஸ் குறித்து அரசிடம் பரிந்துரை செய்யப்படும். இந்த ஆம்புலன்சில் ஓட்டுனர், மருத்துவ உதவியாளர் மற்றும் தீவிர சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் இடம் பெற்றிருக்கும்" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
boat ambulance service in tamilnadu