சென்னையில் பரபரப்பு: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! - Seithipunal
Seithipunal


பெருகி வரும் ஜனத் தொகைக்கு ஏற்பவும், போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவும், சென்னை போன்ற பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப் பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவையினால் நாள்தோறும் லட்சக் கணக்கான மக்கள் பயன் பெறுகின்றனர். 


அந்த வகையில் சென்னை பரங்கி மலையிலும் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பரங்கிமலையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மோப்ப நாய் உதவியுடன் சிறப்பு படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த சிறப்பு படையைச் சேர்ந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரமாக தொடர்ந்து சோதனை நடத்தியும் வெடிகுண்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. 

 

இதையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி தான் என்று முடிவுக்கு வந்த சிறப்பு படை போலீசார் மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் யார் என்ற விசாரணையில் தற்போது இறங்கியுள்ளனர். மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தொடர்ந்து சோதனை நடத்தப் பட்டு வருகிறது. 

நேற்று தான் செனனை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டடு அது புரளி என்று கண்டறியப் பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb Threat in Parangimalai Metro Railway Station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->