இதுதான் கடைசி வாய்ப்பு...ஹமாசுக்கு டொனால்டு டிரம்ப்  எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


20ம் தேதிக்குள் பணய கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவில்லையென்றால் மத்திய கிழக்கில் நரகம் வெடிக்கும்' என ஹமாசுக்கு டொனால்டு டிரம்ப்  எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம்  இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். ஓராண்டை கடந்தும் இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் நீடித்துவரும் நிலையில்  காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கத்தாரில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.போரை நிறுத்தவும், பணய கைதிகளை மீட்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 20ம் தேதி பதவியேற்க உள்ளநிலையில்  அவர் பதவியேற்கும்முன் இஸ்ரேல் , ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு பணய கைதிகள் மீட்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், 20ம் தேதிக்குள் பணய கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டுமென ஹமாசுக்கு  டொனால்டு டிரம்ப்  கெடு விதித்துள்ளார்.இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில், 20ம் தேதி நான் பதவியேற்கும்முன் ஹமாஸ் பணய கைதிகளை விடுதலை செய்யவேண்டும்என்றும்  பேச்சுவார்த்தை தொடர்பாக நான் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவிரும்பவில்லை என தெரிவித்துள்ள  டொனால்டு டிரம்ப் அப்படி  பணய கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யப்படவில்லையென்றால் மத்திய கிழக்கில் நரகம் வெடிக்கும்' என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is the last chance Donald Trump warns Hamas


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->