பரபரப்பு - சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டில் விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படு வருகிறது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் விமானங்கள் அவசர அவரமாக தரையிறக்கப்படுகின்றன. அதிலும் கடந்த சில நாட்களில் 300க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. அதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

அதாவது, விமான நிலைய கழிவறையில் திரவ வடிவிலான வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு மர்ம மின்னஞ்சல் வந்துள்ளது. உடனே, விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அதில், வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்து. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb threat to chennai airport


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->