சென்னை : விரைவில் வர போகிறது "புத்தகப் பூங்கா".. எங்கு என்று தெரியுமா?! - Seithipunal
Seithipunal



சென்னையின் இந்த இடத்தில் விரைவில் புத்தகப் பூங்கா வரவுள்ளதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து வெளியான அறிவிப்பில், இந்த புத்தகப் பூங்காவில் சுமார் க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் படும் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் தமிழ் மற்றும்  ஆங்கிலம் என இரு மொழி புத்தகங்களும் இந்த பூங்காவில் இடம் பெறும் என்றும் தெரிகிறது. மேலும் அனைவரும் அமர்ந்து படிக்க ஏதுவாக அனைத்து வசதிகளும் இந்த புத்தகப் பூங்காவில் செய்யப் படும் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த புத்தகப் பூங்கா அமையப் போகும் இடம் சென்னையில் ஆயிரக் கணக்கான மக்கள் தினமும் வந்து செல்லும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தான். சென்னையில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. 


.
முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை தற்போது இரு வழித் தடங்களில் மட்டும் இயக்கப் படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் கூட்டத்தால் தற்போது 2 ம் கட்ட மெட்ரோ ரயில் சேவைக்கான திட்டம் மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் பயணிகளை மேலும் கவரும் விதமாக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது சென்னை சென்ட்ரலில் புத்தகப் பூங்கா அமைப்பதற்காக திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புத்தகப் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Book Park Will Arrive In Chennai Soon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->