பூஸ்டர் தடுப்பூசி விவகாரம்.! செல்போனுக்கு வரும் லிங்க்., தொட்டாலே சோலி முடிஞ்சுடுமாம்., போலீஸ் எச்சரிக்கை.!
booster vaccine fake link and sms
நாடு முழுவதும் தற்போது உருமாறி உள்ள ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் இதன் பரவல் விகிதம் மற்ற வகை வைரசை விட அதி தீவிரமாக உள்ளதால், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஒன்பது மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், போலீசார் ஒரு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில், பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு விருப்பமா என்று உங்கள் செல்போன் எண்ணிற்கு லிங்க் ஒன்றை அனுப்பி, அதில் விவரங்களை பதிவிடுமாறு ஒரு லிங்க் ஒன்று வருகிறது.
இதில் விவரங்களை பதிவு செய்த பின்னர், உங்களுக்கு வரும் ஒடிபி என்னை அனுப்பி விட்டால், அவர்கள் அதன்மூலம் உங்கள் செல்போனில் உள்ள விவரங்கள் மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுகின்றனர்.
இதுகுறித்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
உங்களுடைய செல்போன் எண்ணுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக ஏதேனும் ஓடிபி எண்ணை கேட்டால் நீங்கள் வழங்கக்கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தியை நம்ப கூடாது என்றும் லிங்குகள் மூலம் பதிவிறக்கம் செய்ய கூடாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
booster vaccine fake link and sms