நாளை முதல் தமிழகத்தில் 3 ஆயிரம் ரூபாய் கூடுதல் விலை உயர்வு.! அதிரடியாக அறிவித்த சங்கம்,!
bore well price hike
கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாளை முதல் ஆழ்துளை கிணறு அமைக்கும் கட்டணத்தை ஒரு அடிக்கு 15 ரூபாய் அதிகரித்து ரிக் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு போர்வெல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் திருச்செங்கோடு சங்க தலைவர் லட்சுமணன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,
"தமிழகத்தில் மீனவர்களுக்கு வழங்குவது போல் மானிய விலையில் ரிக் வண்டி உரிமையாளர்களுக்கு டீசல் வழங்க வேண்டும், சரக்கு லாரிகளுக்கு உள்ளது போல் இந்தியா முழுமைக்கும் ஒரே பெர்மிட் சிஸ்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தம் செய்தோம்.
எங்களின் இந்த போராட்டம் நிறைவடைந்துள்ளது. டீசல் விலை உயர்வால் ஒவ்வொரு ஆழ்துளை கிணறு அமைக்கும் போதும் எங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.
இதன் காரணமாக ஒருமனதாக நாங்கள் அனைவரும் அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு ஒரு அடிக்கு தலா 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விலை உயர்வு செய்து கொள்ள முடிவெடுத்துள்ளோம்.
இதன் மூலம் ஒரு ஆழ்துளை கிணறு அமைக்க கூடுதலாக 3 ஆயிரம், 4 ஆயிரம் ருபாய் செலவாகும். எங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" இவ்வாறு அந்த செய்தியாளர் சந்திப்பில் லட்சுமணன் தெரிவித்தார்.