காதலுக்கு நோ சொன்ன பள்ளி மாணவி - ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்.!
boy attack to school student in kolathur
சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் பெரவள்ளூரில் உள்ள ஒரு துணி கடையில் வேலை செய்து வருகிறார். இவர், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். அப்போது சந்தோஷின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த மாணவி இவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், தன்னை காதலிக்க வலியுறுத்தி பள்ளி மாணவியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சந்தோஷ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
boy attack to school student in kolathur