வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய தெருநாய்! மருத்துவமனையில் சிறுவன்! - Seithipunal
Seithipunal


சென்னையில் தொடரும் நாய்கடி சம்பவங்கள் நேற்று சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது தெரு நாய் கடித்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனைக்குரியது. நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த 20 பயணிகளை தெருநாய்கள் கடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வளர்ப்பு நாய் உள்ளிட்ட பிராணிகள் வளர்ப்பதற்கு மாநகராட்சியின் அனுமதி கட்டாயம் என்று அறிவித்தார். ஆகினும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இந்த நாய் கடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.


சென்னை தாம்பரம் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்துக்கு உட்பட்ட திருமலை நகரை சேர்ந்தவர் முரளி. அவரது மகன் மாதேஸ்வரன் (8). நேற்று முன்தினம் சிறுவன் மாதேஸ்வரன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த தெரு நாய் ஒன்று அவனை கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனை மீட்டு  குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவனை நாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து  நடைபெறாமல் இருக்க தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy bitten by dog ​​admitted to hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->