தர்மபுரி : நீர்தேக்கத் தொட்டியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் உடல் -  கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.!! - Seithipunal
Seithipunal


தர்மபுரி : நீர்தேக்கத் தொட்டியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் உடல் -  கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.!!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் மதியரசு. ஆறு வயதுடைய இவரைக் கடந்த இரண்டு நாள்களாக காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுவன் மதியரசை தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். இதற்கிடையே தாட்டம்பட்டி பகுதியில்  காலியான குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது இறந்த நிலையில் கிடந்தது காணாமல் போன சிறுவன் மதியரசு என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிறுவனை நரபலி கொடுப்பதற்காக யாராவது கடத்தினார்களா?, சிறுவன் மரணத்தில் பின்னணியில் வேறு காரணங்கள எதுவும் உள்ளதா? தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன சிறுவன், நீர்தேக்க தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy body rescue in water tank in dharmapuri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->