சென்னையில் பயங்கரம்.. போதை ஊசியால் சிறுவன் பலி! - Seithipunal
Seithipunal


சென்னையில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் பிராட்வே பகுதியில் தனது வயதையொத்த நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசி எடுத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து சில மணிநேரங்களில் அந்த சிறுவன் மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுவனின் நண்பர்கள், உடனடியாக மயங்கிய சிறுவனை சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அச்சிறுவன் உயிரிழந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் போதை ஊசி எடுத்துக்கொண்டதால் தான் உயிரிழந்துள்ளார் என்று அறிந்து கொண்டுள்ளார்.

 

இதையடுத்து மருத்துவர் போலீஸாருக்குத் தகவல் தந்து, ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரவழைத்துள்ளார். தொடர்ந்து இறந்த சிறுவனை சோதனை செய்த போலீசார் அவரது சட்டைப்பையில் போதை மருந்து மற்றும் ஊசி ஆகியவை இருந்ததைக் அதிர்ந்தனர். 

 

இதையடுத்து சிறுவர்களுக்கு போதை ஊசி எப்படி கிடைத்தது? என்று விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாகவே சிறுவர்கள் போதை ஊசிக்கு அடிமையாகி வருவதாக மனநல மருத்துவர் ஷர்மியா ஜெயக்குமார் அதிர்ச்சிகரமானத் தகவலைக் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர், "முக்கியமாக வட சென்னை சிறுவர்கள் அதிகளவில் போதை மருந்துக்கு அடிமையாகி உள்ளனர். நாளடைவில் அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இதற்கு அடிமையாகி அப்நார்மல் ஆகிவிடுவது தான் கொடுமை" என்று அதிர்ச்சிகரமான தகவலைக் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy died due to drug injection in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->