புதுக்கோட்டையில் சோகம் - விநாயகர் சிலைக்கு சீரியல் லைட் அலங்காரம் செய்த சிறுவன்.! மின்சாரம் தாக்கி பலி.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் சோகம் - விநாயகர் சிலைக்கு சீரியல் லைட் அலங்காரம் செய்த சிறுவன்.! மின்சாரம் தாக்கி பலி.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியைச் சேர்ந்தவர் சின்னக்கருப்பன். பதினோரு வயதுடைய இவர் அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி என்பதால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சின்னக்கருப்பன் தானும் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்த திட்டமிட்டு அதன் படி அவர் விநாயகர் சிலை செய்துள்ளார். மேலும், அந்த விநாயகர் சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்வதற்காக சீரியல் லைட்டை வைத்து சிலையை அலங்கரித்துக் கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பயந்து சம்பவ இடத்திலேயே சிறுவன் சின்னக்கருப்பன் துடிதுடித்து உயிரிழந்துவிட்டார். இதைப்பார்த்த அவரது பெற்றோர்கள் கதறி அழுத்துள்ளனர். 

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் துவங்கியிருந்த வேலையில் சிலையை அலங்கரிக்கும் போது ஏற்பட்ட மின் விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy died for electric shock attack in putukottai aranthangi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->