ராணிப்பேட்டை || பெற்றோரின் சண்டையை பார்த்து பயந்து ஓடிய சிறுவன் - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை || பெற்றோரின் சண்டையை பார்த்து பயந்து ஓடிய சிறுவன் - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துளசி-கஸ்தூரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், துளசி கடந்த சில நாட்களாகவே மது அருந்திவிட்டு வீட்டில் தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். 

அதன்படி நேற்று நள்ளிரவும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சில நிமிடத்தில் சண்டையாக மாறியுள்ளது. இதனால் பயந்துபோன அவர்களது மகன் மணிகண்டன் திடீரென வீட்டிற்குள் ஓடியுள்ளார். அப்போது, அந்த சிறுவன் எதிர்பாராத விதமாக கீழே அறுந்து கிடந்த மின்சாரவயரை மிதித்துள்ளார். 

இதில், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனின் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோரின் சண்டையை பார்த்து பயந்து போன சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy died for electric shock attack in ranipet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->