சென்னை || நீச்சல் குளத்தில் தவறி விழுந்த சிறுவன் பலி.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


நிச்சல் குளத்தில் தவறி விழுந்த சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு திருமணமாகி வளர்மதி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். அவரது சகோதரி உஷா அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக அண்ணன் மகன் ஹரிகரனை  அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்து சென்றார்.

அப்போது குழந்தையை விட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவன் நீச்சல் குளத்தில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.அந்த குளத்தில் இருந்த தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் குழந்தை விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை என தெரிகிறது.

குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்ததை அறிந்த குடிருப்புவாசிகள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்கின்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy drowns in Swimming poll


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->