தூத்துக்குடி || மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரவது மகன் பால்ராஜ்(24). இவர் விளாதிக்குளம் பகுதியில் சொந்தமாக வெல்டிங் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த ஒர்க் ஷாப்பில் பகுதி நேர பணியாளராக அதே பகுதியை சேர்ந்த கர்ணமகாராஜா என்பவரது மகன் குருமூர்த்தி(15) வேலை பார்த்து வந்தார். இவர் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு இரவில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த சிறுவன் குருமூர்த்தி, தவறுதலாக மின்சார ஸ்விட்ச் பெட்டியை காலால் மிதித்துள்ளார். இதிலிருந்து குருமூர்த்தி மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இதைக்கண்ட பால்ராஜ், குருமூர்த்தியை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் கையில் பலத்த காயமடைந்தார். இதை கண்ட அப்பகுதியில் இருத்தவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குருமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பால்ராஜ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து வெல்டிங் ஒர்க் ஷாப் உரிமையாளரான பால்ராஜிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy killed electrocuted in Thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->