பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.!
B.pharm and nursing college applications extend
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த படிப்புகளான பி.ஃபார்ம், பி.எஸ்.சி. நர்சிங், டிப்ளமோ இன் சைக்கியாட்ரி உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
2022-2023 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் , பி . பார்ம் . ( லேட்டரல் என்டிரி ) படிப்பு , போஸ்ட் பேசிக் பி . எஸ் . சி . நர்சிங் படிப்பு & போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு , பெண்களுக்கான செவிலியர் பட்டயப்படிப்பு , மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய படிப்புகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி பி பார்ம், பிஎஸ்சி நர்சிங் போன்ற படிப்புகள் சேர விண்ணப்பிப்பவர்கள் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றே கடைசி நாள் என இருந்த நிலையில் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக தகவல்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
English Summary
B.pharm and nursing college applications extend