நாளை தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை பொருத்தவரை மழைக்கான வாய்ப்பு இல்லை. அடுத்து வரக்கூடிய 7 நாட்களும் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் வானம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இன்று சென்னை திருநின்றியூரில் கடும் வெயிலின் தாக்கத்தால் 12-ம் வகுப்பு மாணவன் சக்தி என்பவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சக மாணவன் இதய நோய் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதி சடங்கிற்கு சென்றபோது இந்த மாணவன் வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்து மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட் அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சிறுவனுக்கு பிறவியிலேயே வியர்வை சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யாமல் இருந்ததாலும், மற்ற இணை நோய் பாதிப்புகள் இருந்ததாலும் உயிரிழந்து உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Breaking News‌ Chennai TN Rains HeavyRains


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->