நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதல்! இரும்பு குண்டுகளை வீசி தாக்குதல்! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஃபைபர் படகு மீனவர்கள் மீது இரும்பு குண்டுகளை வீசி, விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் நாகை மாவட்டம், செருதூரை சேர்ந்த ஃபைபர் படகு மீனவர்கள் 3 பேர் படுகாயம் அடைத்து உள்ளனர்.

காயமடைந்த மூன்று பெரும் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நங்கூரமிட்டு இருந்த ஃபைபர் படகின் கயிற்றை, விசைப்படகு மாட்டி இழுத்துச் சென்றதால் இந்தத்தாக்குதல் நடந்து உள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இருதரப்பு மீனவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Breaking News Nagapattinam FisherMen Fight  


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->