#தேனி || மதுபோதையில் தகராறு... அண்ணனை கொலை செய்த தம்பி..! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் ஏற்பட்ட தகராற்றில் அண்ணனை கொன்ற தம்பி காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், சக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். அவரது மூத்த மகன் வசந்தகுமார் அந்த பகுதியில் பால் கறக்கும் வேலை செய்து வந்தார். இளைய மகன் மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான கூறப்படுகிறது.

வசந்த் குமார் தனது பாட்டியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளார். அப்பொழுது அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தம்பி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த வசந்தகுமாரின் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டுள்ளார்.

 மேலும், அரிவாள்மனை அண்ணனின் கை கால்கள் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 16 வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brother killed His younger Brother Near theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->