பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர்! "முட்டாள்" தனமான வாதம் - எதிர்க்கட்சிகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி!
Budget 2024 NirmalaSitharaman
மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை அளித்துள்ளார்.
அவரின் அந்த உரையில், "மாநிலங்களின் பெயர்களை பட்ஜெட் உரையில் குறிப்பிடவில்லை என்றால், நிதி ஒதுக்கப்படவில்லை என அர்த்தம் இல்லை.
முட்டாள் தனமான வாதங்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலத்திற்கும் அநீதி இழைக்கப்படவில்லை.
2 மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுவது முற்றிலும் தவறானது. மக்களின் மனங்களில் எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை விதைத்து வருகின்றன.
மத்திய பட்ஜெட்டில் ரூ.17,000 கோடி ஜம்மு, காஷ்மீருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ரூ.9,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் கேரளாவிற்கு அளிக்கபட்டுள்ளது.
வேலைவாய்ப்பின்மை 6.8% லிருந்து 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. எஸ்சி/எஸ்டி மக்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து கேள்வி கேட்பவர்கள் கர்நாடகாவை பார்க்க வேண்டும்.
எஸ்சி/எஸ்டி மக்களுக்கான நிதியை கர்நாடக அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது" என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை அளித்துள்ளார்.
English Summary
Budget 2024 NirmalaSitharaman