மத்திய பட்ஜெட் : திமுக எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


மத்திய பட்ஜெட் குறித்து விவாதிக்க கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார். 

2024 - 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கும், ரயில்வே துறைக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்த பட்ஜெட்டில்  வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் நிதி ஒதுக்கீடு குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளதாக இண்டி கூட்டணிக் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

பாஜக மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு காரணமாக உள்ள ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அதிக நிதி மற்றும் திட்டங்களை அறிவித்து, மற்ற மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டுவதாக விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த இரண்டு மாநிலங்களுக்காகவே இந்த பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இண்டி கூட்டணி குற்றம் சாட்டி உள்ளது.

இந்த நிலையில், இன்று இண்டி கூட்டணி எம்பிகள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு செய்திருப்பதாகவும், நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கான நிதி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படமல் இருப்பது குறித்தும் மாநிலங்களவையில் விவாதிக்கக் கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Budget For Viksit Bharat DMK RajyaSabha MP Trichi Siva 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->