ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நடைமுறையால் 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்! பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தகவல்.!
Budget speech
ஜிஎஸ்டி இழப்பீட்டு நடைமுறையால் தமிழகத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் முதல் தொடங்க உள்ள நிதியாண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதன் மீதான உரையை நிகழ்த்தி வருகிறார்.
அதில் ஜிஎஸ்டி முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிதி பற்றாக்குறை 4.61 விழுக்காட்டில் இருந்து, 3.80 விழுக்காடாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 15-வது நிதி குழுவின் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதாகவும், ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்தபின் 20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சியில் 10% பங்கை தமிழகம் அளிக்கும் நிலையில் அதற்கான நிதி கிடைப்பதில்லை என்றும், வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் 7 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் நிதிபமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.