பெஞ்சல் புயல் - சென்னையில் பேருந்து சேவை நிறுத்தம்.!
bus service stop in chennai for storm
தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் பெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-
"இன்று அதிகாலை முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். பெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகவே புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
bus service stop in chennai for storm