இ சேவை மையம் மூலம் பேருந்து டிக்கெட் - பயணிகளுக்கு குட் நியூஸ்.!!
bus ticket booking in e service center
தொலைதூரம் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் பேருந்து டிக்கெட்டை இ சேவை மையத்தின் மூலம் பதிவு செய்யலாம் என்ற முறை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைனில் தொடங்கிவிடும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு முறையானது https://www.tnstc.in மற்றும் TNSTC என்ற செல்போன் செயலி வழியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கிராமப்புற மக்களும் முன்பதிவு செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் இ-சேவை மையங்கள் மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்த நபா் பயணச் சீட்டுகளை ரத்து செய்ய வேண்டுமென்றாலும் கூட அதை இ-சேவை மையம் மூலமே ரத்து செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
bus ticket booking in e service center