இரண்டாவது திருமணம் செய்த தொழிலதிபர் மகன் - அதிரடி காட்டிய பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


இரண்டாவது திருமணம் செய்த தொழிலதிபர் மகன் - அதிரடி காட்டிய பொதுமக்கள்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள, முத்துக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும், யுத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், யுத்தி கருத்து வேறுபாடு காரணமாக தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

ஜவுளி தொழில் செய்து வந்த சந்தோஷ் குடும்பத்தினர் புதிய நிறுவனம் தொடங்குவதாக கூறி யுத்தியின் பெற்றோரிடம் ஒரு கோடி ரூபாய் பெற்று யுத்தியையும், சந்தோஷின் அண்ணன் மனைவி ஹரிநந்தினியையும் நிறுவன இயக்குநர்களாக நியமித்தனர்.

அதன் பின்னர் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சந்தோஷூக்கு பிரியங்கா என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்று அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது யுத்திக்கு தெரிய வந்துள்ளது.

மேலும், தனது பெயரில் இருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவன பங்குகளை, சந்தோஷ் குடும்பத்தினர் போலியாக கையெழுத்திட்டு வேறொருவரின் பெயருக்கு மாற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதிர்ச்சிடைந்த யுத்தி, சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். 

இந்த புகார் தொடர்பாக, விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சந்தோஷ், சங்கீத், அவர்களது தாயார் தமிழ்செல்வி, தந்தை சுரேஷ், சங்கீத்தின் மனைவி ஹரிநந்தினி, சந்தோஷின் இரண்டாவது மனைவி பிரியங்கா உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் தலைமறைவான 6 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bussiness man son got second marriage first wife against pettition in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->