வள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா..? பேனா சிலை கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு...!!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரை பகுதியில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சின்னம் அமைப்பின் தொடர்பான கருத்து கேட்டு கூட்டம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த கருத்துக்கேற்ப கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். 

இந்த கருத்து கேட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேனா நினைவுச் சங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அரசு பள்ளிகளை சீரமைக்க நிதி இல்லை, ஆனால் பேனா நினைவுச் சின்னம் அமைக்க நிதி இருக்கா..? என சீமான் கேள்வி எழுப்பினார். அதேபோன்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கலந்து கொண்ட சங்கர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அதேபோன்று மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி பேனா சின்னம் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும். ஆனால் சுற்றுச்சூழல் குறைபாட்டை முழுமையாக நிவர்த்தி செய்த பிறகு அமைக்க வேண்டும் என தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

அதேபோன்று அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் கலந்து கொண்டு தனது கருத்தை எடுத்து வைத்தார். அப்பொழுது பேசிய அவர் "கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை 133 அடி தான் உள்ளது. ஆனால் இவர்கள் பேனா சிலை 137 அடியில் அதாவது 41 மீட்டரில் வைக்கிறார்கள்.

அப்போ வள்ளுவரை விட பெரியவரா கலைஞர் கருணாநிதி...?  உலகத்திற்கே இறையாண்மை கற்றுத் தந்தவர் திருவள்ளுவர்.." என பேசிக்கொண்டிருக்கும் பொழுது திமுகவினர் கடுமையாக எதிர்த்தனர். இதனால் கருத்து கேட்டு கூட்டத்தில் சலசலப்பு உண்டானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bustle in Karunanidhi pen memorial Consultation meeting


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->