உரிமம் இல்லாமல் இறைச்சிக் கடை நடத்தக் கூடாது - மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
Butcher shop not run without license madhurai high court order
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாதவாலயத்தைச் சேர்ந்தவர் சையத் அலி பாத்திமா. இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது,
"நான் மாதவாலயம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது வீட்டின் அருகே அனுமதியில்லாமல், மாட்டிறைச்சி கடை ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடையால் எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே, இந்த மாட்டிறைச்சி கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு உரிய உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராம பஞ்சாயத்து தரப்பில், மாட்டிறைச்சி கடை நடத்தி வரும் நபர், ஒரு கோழி இறைச்சி கடை நடத்துவதற்கு மட்டுமே உரிமம் பெற்றுள்ளார். ஆனால் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடையும் சேர்த்து நடத்தி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, "உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல், எந்த ஒரு நபரும், எந்த இடத்திலும் கால்நடைகள், செம்மறி ஆடு மற்றும் பன்றி போன்றவற்றை வெட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
கால்நடைகளை கோவில் திருவிழாக்கள், கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக்கூடம் போன்றவற்றைத் தவிர வேறு இடங்களில் வெட்டுவது குற்றம். ஆகவே, உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து, தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் மூன்று வாரங்களுக்குள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
English Summary
Butcher shop not run without license madhurai high court order