அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல்! அதிரடி முடிவுகள்! அமைச்சர் சொன்ன செய்தி! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் உள்ளிட்ட அணைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். 

மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரியவந்தது.

இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதி மற்றும் மனித வளம் மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிக்கையில், "இந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.44,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சரவை கூட்டத்தில் எரிசக்தி துறை மூலம் 3 முக்கிய கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வாகன தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நீரேற்று புனல்மின் திட்டம், தமிழ்நாடு சிறுபுனல் திட்டம், காற்றாலை திட்டத்தை புதுப்பித்தல், புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி உள்ளிட்ட கொள்கைகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2030-ம் ஆண்டிற்குள் பசுமை எரிசக்தி மூலம் 20,000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் ரூ.1707 கோடி மதிப்பில் மில்கி மிஸ்ட் தொழிற்சாலை அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செம்கார்ப் நிறுவனம் புதிய ஆலையை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிகித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cabinet Meeting MK Stalin Thangam Thenarasu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->