அமைச்சர்கள், அதிகாரிகளில் பதவி தப்புமா..? முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்..!!
Cabinet meeting today chaired by CM MKStalin
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. வரும் மே 10ம் தேதிக்கு மேல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ளதால் அதற்கு முன்பு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிந்து 3வது ஆண்டில் அடி எடுத்து வைக்கப் போகிறது.
இதுவரை இரண்டு முறை அமைச்சரவையில் மாற்றம் நடைபெற்று உள்ளது. ஆனால் அமைச்சர்களின் பதவி பறிப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் அமைச்சரவையில் சில மாற்றம் இருக்கலாம் என்ற தகவல் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பேசப்படுகிறது.
இதனால் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோன்று பல்வேறு துறைகளின் செயலாளர்களும் மாற்றம் செய்ய ஆலோசனை நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில துறையின் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் இடையே சுமுகமான உறவு இல்லாததால் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள், செயல்பாடுகளில் தொய்வு, அமைச்சர்கள் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Cabinet meeting today chaired by CM MKStalin