அரியலூர்: சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் பூண்டு செல்வம் என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அரியலூர் மாவட்ட தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பூண்டு செல்வத்தை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், இவர் கும்பகோணத்தில் இருந்து காய்கறி ஏற்றி வரும் பொழுது கஞ்சாவை வாங்கி வந்து சுற்று வட்டார பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவரிடமிருந்த 2 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பூண்டு செல்வத்தை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis seller arrest in Ariyalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->