தடுப்பு சுவரில் மோதி கார் விபத்து.. நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்.! - Seithipunal
Seithipunal


தடுப்பு சுவரில் மோதி கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் இவர் தனது காரில் பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது குரோம்பட்டை  பெரிய ஏரி அருகில் ரேடியல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது விபத்துக்குள்ளானது.

மேலும், விபத்துக்குள்ளானதை அடுத்து கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. உடனடியாக காரில் இருந்த லோகேஸ்வரன் கீழே இறங்கினார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீப்பற்றி எரிந்த காரை அணைத்தனர்‌. ஆனால் காரின் முன்பகுதி முழுவதுமாக எரிந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car accident in pallavaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->