உங்களுக்கு கார் பரிசு || சேலத்து பெண் 8 லட்ச ரூபாயை கோட்டைவிட்டது எப்படி.?!  - Seithipunal
Seithipunal


சேலம் அருகே கார் பரிசு விழுந்ததாக கூறி, ஒரு பெண்ணிடம் 8 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், குப்பனூர் பகுதியை சேர்ந்த சித்ராவுக்கு, தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் பதிமூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பரிசாக 16 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக விழுந்துள்ளதாக கடிதம் வந்துள்ளது.

மேலும், இந்த காரினை பெறுவதற்கு சான்றிதழ்கள் தயாரிக்க 20 ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும் என்று செல்போன் மூலம் குறுஞ்செய்தியும் வந்துள்ளது.

இந்த மோசடி தகவலை நம்பிய ஜெயசித்ரா, 20 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். மேலும் அவரிடம் இருந்து 26 தவணைகளாக சுமார் 8 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயை அந்த ஆன்லைன் நிறுவனம் பிடுங்கியுள்ளது.

அதன் பின்னரும் அந்த காரை ஜெயசித்திராவுக்கு வழங்கவில்லை. ஒருவழியாக தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயசித்ரா, சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Car gift Salem woman fortify 8 lakh rupees


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->