சேலம் || கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபதி (52). இவர், தனது மகள் அனுஸ்ரீயை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக, மனைவி ஜெயசுதா, மகன் திருப்புகழ், உறவினர் நாராயணன் ஆகியோருடன் இன்று அதிகாலை வாழப்பாடி வழியாக சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது வாழப்பாடி அடுத்து முத்தம்பட்டி அருகே கார் சென்றபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் ஓம்சக்தி (28) உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car overturned in the ditch and the accident in salem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->