தொழில் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி முகாம்..சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!
Career and Employment Guidance Camp Sivaganga District Collector
2025-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு,தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்த வழிகாட்டி ஆலோசனை முகாம்வருகின்ற 06.04.2025 அன்று காலை 09.00 மணியளவில் சிவகங்கை, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் (Auditorium ) நடைபெறவுள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:சிவகங்கை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ் 2025-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்த வழிகாட்டி ஆலோசனை முகாம், தன்னார்வ இயக்கத்தின் துணையுடன் வருகின்ற 06.04.2025 அன்று காலை 09.00 மணியளவில் சிவகங்கை, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் (Auditorium ) நடைபெறவுள்ளது.
எனவே, மாணாக்கர்கள் இவ்வழிகாட்டி ஆலோசனை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.

English Summary
Career and Employment Guidance Camp Sivaganga District Collector