பெண்ணை தாக்கியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது பாய்ந்த வழக்கு.!! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது வரவேற்பு நிகழ்ச்சிக்கு கூட்டத்தை கூட்டி வர கொடுக்கப்பட்ட பணத்தை பங்கு பிரிப்பது குறித்த தகராறில் பெண் ஒருவரை பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

மோடியின் வரவேற்பு நிகழ்ச்சிக்காக கூட்டத்தை கூட்டி வர ரூ.50,000 வழங்கப்பட்டதாகவும், ஆனால் தேவி என்ற அந்த பெண் கூட்டத்தை கூட்டிவரவில்லை என கூறி பங்கு பிரிக்கும் போது தாக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் அந்த பெண்ணின் தலையில் 4 தையல் போடும் அளவுக்கு காயாகி ஏற்பட்டது. தேவி அளித்த புகாரின் பேரில் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் பாஜக நிர்வாகிகள் மீதுபோலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case against bjp Amar Prasad Reddy for assaulting woman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->