சூடுபிடிக்கும் தேர்தல் களம் - தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அரசியல் கட்சியினர் 12 பேர் மீது வழக்கு.!
case file against 12 political partys for violation of election rules in vikravandi
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு நாளை மறுதினம் புதன்கிழமை இடைத்தேர்தலை நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளையும் அமல்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலையுடன் இறுதிக்கட்ட பிரசாரம் இன்று ஓய்கிறது.
இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அரசியல் கட்சியினர் மீது தேர்தல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வாக்கூரில் அனுமதியின்றி பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சி மாவட்டசெயலாளர் பூபாலன், விக்கிரவாண்டி பேருந்து நிறுத்தம் அருகில் அனுமதியின்றி கட்சிக்கொடி கம்பங்களை நட்டதாக நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாராயணசாமி உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் விராட்டிக்குப்பத்தில் விளம்பர பதாகை வைத்த தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் கலைச்செல்வன், சானாந்தோப்பில் கொடி தோரணங்களை கட்டிய பா.ம.க. கிளை செயலாளர் மதியழகன், கடையத்தில் கொடி தோரணங்களை கட்டிய தி.மு.க. நிர்வாகிகள் தேவேந்திரன், குணசேகரன், பா.ம.க. நிர்வாகி கணேசன், ஆரியூரில் கொடிக்கம்பம் நட்ட பா.ம.க. கிளை செயலாளர் விஜயகுமார், அதே பகுதியில் விளம்பர பதாகை வைத்த தி.மு.க. கிளை செயலாளர் ராகுல் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சி.என்.பாளையத்தில் விளம்பர பதாகைவைத்த தி.மு.க. கிளை செயலாளர் முருகன், அயினம்பாளையத்தில் விளம்பர பதாகை வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுந்தரவளவன், செ.குன்னத்தூரில் விளம்பர பதாகை வைத்த தி.மு.க. நிர்வாகி புஷ்பா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரைக்கும் மொத்தம் 12 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary
case file against 12 political partys for violation of election rules in vikravandi