குடிசை வீடுகள் எரிந்த விவகாரம் - பாஜகவினர் மீது வழக்குப்பதிவு.!
case file against bjp parties for house fire issue in nagai
நேற்று நாகப்பட்டினம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக பாஜகவினரால் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது பட்டாசு தீப்பொறிப்பட்டு இரண்டு குடிசை வீடுகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், குடிசை வீடுகள் எரிந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. melum, தடை செய்யப்பட்ட இரட்டை சரம் வெடி விற்பனை செய்த பட்டாசு கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதுமட்டுமல்லாமல், தீப்பிடித்து எரிந்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி உள்ளிட்டோர் அளித்த புகார்களின் அடிப்படையில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
English Summary
case file against bjp parties for house fire issue in nagai