மதுரை || தோரணவாயில் இடிந்து விழுந்த சம்பவம் - 2 பேர் மீது வழக்கு..!
case file against two peoples for thorana gate collapse case
மதுரை மாவட்டத்தில் உள்ள மாட்டுத்தாவணி பிரதான சாலையில் ஆம்னி பேருந்து நிலையத்தின் முன்பாக சாலையின் நடுவே பழமையான நுழைவு வாயில் ஒன்றுள்ளது. இந்த நுழைவு வாயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வந்ததனால், இதனை இடிப்பதற்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நுழைவு வாயிலை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் நடந்தது. இதையடுத்து பொக்லைன் ஆபரேட்டர், தோரணவாயில் பகுதிகளை எந்திரம் மூலம் இடித்து கொண்டிருந்தப்போது தோரணவாயில் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து பொக்லைன் எந்திரம் மீது விழுந்தது.
![](https://img.seithipunal.com/media/CRIME 005.png)
இந்த விபத்தில் பொக்லைன் ஆபரேட்டர் உள்பட இரண்டு பேர் சிக்கிக்கொண்டார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் பொக்லைன் ஆபரேட்டர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொருவர் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மாட்டுத்தாவணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தோரணவாயில் இடிந்து விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, 3 பிரிவுகளின் கீழ் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
case file against two peoples for thorana gate collapse case