தருமபுரி - போலி ஆவணத்தின் மூலம் அரசு வேலை வாங்கியதாக 4 பேர் மீது வழக்கு.!! - Seithipunal
Seithipunal


தருமபுரி - போலி ஆவணத்தின் மூலம் அரசு வேலை வாங்கியதாக 4 பேர் மீது வழக்கு.!!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சக்திவேல். இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியில் துப்புரவு பணியாளராக பணிக்குச் சேர்ந்தார். 

இந்த நிலையில், சக்திவேல் 1998-ம் ஆண்டு பிறந்ததை, 1997-ம் ஆண்டு பிறந்ததாக போலியாக ஆவணம் கொடுத்து துப்புரவு பணியாளர் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் சக்திவேல் கடந்த 2022-ம் ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். 

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் சக்திவேலை பணியில் சேர்த்தது தொடர்பாக அப்போது பதவியில் இருந்த முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கலைவாணி, முன்னாள் மூன்றாவது வார்டு உறுப்பினர் கோவிந்தன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு நீதிபதி உத்திரவிட்டார். 

அதன் படி, மாரண்டஅள்ளி போலீசார் சக்திவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் கலைவாணி, வார்டு உறுப்பினர் கோவிந்தன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on four peoples in dharmapuri for fake document


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->