பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்ட சம்பவம் - 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையில் கணினியில் பதிவு செய்து வைத்திருக்கும் மாணவர்களின் சுய தகவல்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரி புண்ணியகோடி சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

அதன் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டும், பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி கல்லூரிகளுக்கு விற்பனை செய்யும் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கல்வித்துறையின் கணினியிலிருந்து பள்ளி மாணவர்களின் விவரம் திருடப்பட்ட சம்பவத்தில் சைபர் கிரைம் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case filed on school students bio data steal issue in educational department


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->